www.asiriyar.net

Thursday 5 October 2017

அக்டோபர் மாதத்துக்குள் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இணையதள சேவை..! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணையதள சேவை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


பள்ளிக் கல்வித்துறையில் சமீபகாலமாகப் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

 ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் உள்ளது என்று தொடச்சியாகப் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதையடுத்து, பாடத்திட்டங்கள் மாற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'பாடத்திட்டம் மாற்றம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.நவம்பர் மாத இறுதிக்குள் வரைவுப் பாடத்திட்டம் வெளியிடப்படும். வரைவுப் பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள்கள் வரை மக்கள் கருத்து கூறலாம்.

அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் 5 மரக் கன்றுகள் நட்டால், 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். அரசின் அனைத்துப் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment