www.asiriyar.net

Sunday 22 October 2017

மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை

வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரைக்கை சட்டை மற்றும் பேன்ட்; மாணவியருக்கு, சுடிதார் வழங்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல், சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை, ஒரு வகை சீருடையும்; 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு வகையும்; 9 முதல், பிளஸ் ௨ வரை மற்றொரு வகை என, தனித்தனி சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

மலைப்பகுதி மாணவர்களுக்கு, சீருடை மாற்றப்படுகிறது. குளிரிலிருந்து தப்பிக்க, மாணவர்களுக்கு முழுக்கை சட்டை, பேன்ட்; மாணவியருக்கு, சல்வார் கமீஸ் உடையும், அதற்கு மேல் சட்டையும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment