www.asiriyar.net

Tuesday, 10 October 2017

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் - அமைச்சரவை ஆலோசனை!

வரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது -  7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமானது தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.


7வதுஊதிய குழு பரிந்துரைகள் மற்றும் மழை காலங்களில் எடுக்க வேண்டிய ஏற்பாடுகள் பற்றி அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தின் போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டிய உள்ள நிலையில் அதனை இறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment