www.asiriyar.net

Monday, 16 October 2017

பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: கல்வி அமைச்சர் அழைப்பு

''சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள் உடனுக்குடன் சீரமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில், அவர் கூறியதாவது:பஞ்சாயத்து யூனியன் பள்ளிகள், 30 - 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அதில், சில கட்டடங்கள் சேதமடைந்தும், சில பயன்பாட்டுக்கு இல்லாமலும், உள்ளன. அதுபோன்ற கட்டடங்கள், சீரமைக்கப்படுகின்றன. தேவையானால், இடித்து அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டப்படும். அதுபோன்ற கட்டடங்கள் இருந்தால், தகவல் தெரிவிக்கலாம்.
பள்ளி மாணவர்கள், செடி நட்டு வளர்த்தால், அவர்களுக்கு, 5 மதிப்பெண் வழங்கப்படும் என்ற உத்தரவு, முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. 'நீட்' தேர்வுக்காக ஆந்திராவில் பயிற்சி முடித்துள்ளவர்கள், தமிழத்தில் விரைவில் பயிற்சியை துவக்க உள்ளனர்.

No comments:

Post a Comment