www.asiriyar.net

Friday 20 October 2017

7TH PAY COMMISSION |தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2 1/2 மடங்கு ஊதிய உயர்வு, ( பொது மக்கள் ஆவேசம்... ! ! )

ஒரு இளநிலை உதவியாளரின் ( துவக்க நிலை ) அடிப்படை ஊதியம்
ரூ.5,200 + தர ஊதியம்
ரூ.2,400 மொத்தம்
ரூ.7,600
இவற்றில்… ( ரூ.7,600 க்கு அகவிலைப்படி ரூ.10,336 சேர்த்து ஆக மொத்தம் ரூ.17,936 சம்பளம் பெற்று வருவது ஆகும் )
தற்போது பெற்றுவரும் 136 % அகவிலைபடி
ரூ.10,336
இந்த தொகை ஊதிய உயர்வில் அடக்கம் இல்லை.

மேற்சொல்லப்பட்ட மருத்துபடி & வீட்டு வாடகைபடி தவிர்த்து

தற்போது ( current pay ) பெற்று வரும் மொத்த ஊதியம்
மொத்தம் ரூ.17,936
( இதுவே உதாரண உண்மை )

இவற்றில் அடிப்படை ஊதியம் + தர ஊதியம் சேர்த்து வரும்
ரூ. 7,600 ல் × 2.57 (மடங்கு) = ரூ.19,532 இதுதான் ஊதிய உயர்வு தொகை.
இந்த, தொகைக்கு புதிய ஊதிய நிர்ணயப்படி 5 % மட்டும்
= ரூ.977 அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.19,532 வுடன்
ரூ. 977 கூட்டினால் வரும்… மொத்த தொகை
ரூ.20,509
ஆக மொத்தம் சம்பளம்
இதுவே மிக சரியான உதாரண தொகை

இவற்றில் ஏற்கனவே பெற்று வரும்
ரூ.17,936 ஐ கழித்தால்
மீதம் வரும் தொகை
( அதாவது அரசு ஊழியர் பயன் பெறும் சம்பள உயர்வு )
ரூ. 2,573 மட்டும் தான்

ஊழியர் பெற்று வரும்
மொத்த சம்பளத்தில்
30 % வரை ஊதிய உயர்வு என்று சொல்வது தவறான தகவல்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

நமது தமிழ்நாடு அரசு 11/10/2017 புதன்கிழமை
இணையதளத்தில் அரசாணை வெளியிட்டுள்ளது

ஊதியக்குழு
புதிய அரசாணை வெளியீடு 13/10/2017
305, HRA CCA
306, OTHER ALLOWANCES
307, Classification of Employees

Maximum
98 % of Government Servants have
Festival Loan,
GPF Loan,
Society’ Loan,
Bank Personal Loan, Bank Loan (other source) Housing Loan,
Two Wheeler Loan,
Car Loan (Officers level), Children’s Marriage Loan,
Education Loan & Kadi Kraft Loans

பெரும்பாலான 98 % விழுக்காடு அரசு ஊழியர்களுக்கு மேற்படி கடன்கள் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்… ???
பொது மக்கள் இதை அறிவார்களா….????

அரசு ஊழியர்கள் குடும்பத்தின் மீது உண்மை அறியாமல் வசை பொழியும் உறவினர்களும் நட்புகளும் மற்றவர்களும்தான் இந்த கடன்களை அடைப்பார்களா…???

தயவு செய்து உண்மையாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் தர்மத்திற்கு உட்பட்டு சிந்திக்கவும் + பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்.

அரசு ஊழியர்களுக்கு
இரண்டரை மடங்கோ
அல்லது
மூன்று மடங்கோ மொத்த ஊதியம் உயர்த்தி வழங்க வல்லரசு நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்கா , சீனா & ரஷ்யா வால் கூட முடியாது.

No comments:

Post a Comment