www.asiriyar.net

Thursday, 28 September 2017

JIO PHONE : ரூ.1500 முன்பணத்தை திரும்ப பெறுவதற்கான முழு விதிமுறைகள்

ரிலையன்ஸ் நிறுவனம் தனது முதல் வோல்ட்இ பீச்சர்போனினை அந்நிறுவனத்தின் 40-வது பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்தது.

ரிலையன்ஸ் அறிவித்த ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான பயன்பாட்டிற்கு இடம் கொடுக்காத வகையில், ரூ.1,500 முன்பணம் ரிலையன்ஸ் சார்பில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. 

முன்பணத்தை திரும்ப பெற ஜியோபோன் வாங்கும் வாடிக்கையாளர்கள் 36 மாதங்களுக்கு பின் சாதனத்தை ஒப்படைக்க வேண்டும். அந்தவகையில், ஜியோபோனிற்கான முன்பணத்தை திரும்ப பெற பயன்பாடு சார்ந்து ரிலையன்ஸ் சார்பில் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜியோபோனினை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,500 செலுத்த வேண்டும். அவ்வாறு ரீசார்ஜ் செய்யாதவர்களிடம் இருந்து ஜியோபோன் திரும்பப் பெறப்பட்டு, அதற்கான தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். 

ஜியோபோன் விநியோகம் செய்யப்பட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜியோபோனினை எந்நேரம் திரும்ப கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜியோபோனினை ஒப்படைத்தால், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?


ஜியோபோன் திரும்பிக் கொடுக்கும் காலம் 
ஜியோபோன் ஒப்படைக்கும் போது செலுத்த வேண்டிய தொகை
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 12 மாதங்கள் வரை 
 ரூ.1,500/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் சேர்த்து
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 12-இல் இருந்து 24 மாதங்கள் வரை 
 ரூ.1,000/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. அல்லது இதர வரிகள் சேர்த்து
ஜியோபோன் வாங்கிய தேதி முதல் 24-இல் இருந்து 36 மாதங்கள் வரை  
ரூ.500/- மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரிகள் சேர்த்து


ஜியோபோனினை 36 மாதங்களுக்கு பன் திரும்ப ஒப்படைத்தாலும், ஜியோபோன் சீராக வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இத்துடன் ஜியோபோனில் எத்தகைய சேதமும் ஏற்பட்டிருக்க கூடாது.

No comments:

Post a Comment