www.asiriyar.net

Saturday, 23 September 2017

நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி அறிவுரை

நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு அரசுக்கு ஒரு மணி நேரம் போதாதா என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

கால தாமதம் செய்ததால் ஒரு உயிரை இழந்திருக்கிறோம் என்றும் கூறினார். நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என்று திரும்பத் திரும்ப சொன்னதில் ஏமாற்றமே மிஞ்சியது என தெரிவித்த நீதிபதி, நீட் தேர்வு பயிற்சிமையங்கள் தொடர்பாக அக்.6க்குள் விளக்கம் அளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment