மாரடைப்பு வயது வித்யாசங்கள் இன்றி பயமுறுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. ரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் செல்ல வழி வகுக்கிறது. இதில் ஏதேனும் சின்னமாற்றம் அல்லது தடை ஏற்ப்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாய் முடிந்திடும்.
உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை நீங்கள் எளிதாக கண்காணிக்க ஒரு வழி இருக்கிறது. எண்களை கண்காணித்து வந்தாலே போதும்.
இதனை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டாலே நீங்கள் இதயத்தை கவனிக்க துவங்கி விடுவீர்கள்.
ரெஸ்டிங் ரேட் :
ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை இதயம் துடித்தால் அது நார்மலானது. இந்த அளவிலிருந்து அதிகரித்தாலோ குறைந்தாலோ உங்கள் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதென்று அர்த்தம்.
இப்படித் துடிப்பது அதிக நேரம் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
கெட்ட கொழுப்பு :
இதன் அளவு 130 க்கும் குறைவாக இருந்தால் நார்மல். இதன் அளவு 70 முதல் 100 வரையில் இருக்கலாம். கொழுப்பு சேர்வதில் பரம்பரையின் தாக்கமும் இருப்பதால் இதில் கவனம் செலுத்துவது அவசியம்.
பி எம் ஐ :
சராசரியாக ஒருவருக்கு பி எம் ஐ 18-25 வரை இருக்கலாம். ஓவர் வெயிட் இருப்பவர்கள் 25-30 வரை இருக்கலாம்.
இதே ஒபீசிட்டி இருப்பவர்கள் என்றால் 30 வரையில் இருக்கும். இதைத் தாண்டக்கூடாது.
ரத்தக் கொதிப்பு :
இன்றைய வாழ்க்கைமுறையினால் எல்லாருக்கும் டென்ஷன் அதிகரித்திருக்கிறது. உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளின் துவக்கப் புள்ளியாக இந்த ரத்தக் கொதிப்பு தான் இருக்கிறது.
ரத்தக் கொதிப்பு 130 தான் நார்மல். இது அதிகரிக்கவோ குறையவோ கூடாது. 90க்கும் கீழே சென்றால் லோ ப்ரஷர் ஏற்ப்பட்ட மயக்க நிலைக்கு கூட செல்ல நேரிடும்.
ஹீமோகுளோபின் ஏ1சி :
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டறிவது. உங்களுக்கு சுகர் இருக்கிறதா இல்லையா என்பதை ஹீமோகுளோபினில் இருக்கும் ஏ1சி அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
6 இருந்தால் அது நார்மல்.
இடுப்புச் சுற்றளவு :
இடுப்பின் சுற்றளவு ஆண்களுக்கு 35 இன்ச்சும் பெண்களுக்கு 40 இன்ச்சும் இருக்கலாம். உடலில் சேரப்படும் அதிகப்படியான கொழுப்பு பெரும்பாலும் இடுப்பு பகுதியில் தான் போய் சேரும் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் மாரடைப்பு, ரத்த கொதிப்பு, ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
No comments:
Post a Comment