www.asiriyar.net

Wednesday, 13 September 2017

தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்களை பயன்படுத்தி, பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது. 

எனவே, தற்காலிக பணியில் உள்ள, 15 ஆயிரத்து, 500பகுதி நேர ஆசிரியர்கள், செப்., 22 வரை, தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வேலை நிறுத்தம் முடியும் வரை, விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள், வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர். 

இப்போது, தினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment