பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
ஆனால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தடையை மீறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவை மீறியதாக சேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவை நிர்வாகிகளிடம் போலீசார் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment