தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர்.
இவர்கள், தங்களின் பதவி உயர்வுக்காக, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிக்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டும், பல்கலை தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்க, அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், அவரவர் பணியாற்றும் பள்ளியிலேயே கள பயிற்சி பெற, கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment