எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று காலை தொடங்கியது.
மருத்துவப் படிப்புக்கான நீட் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்கான அட்டவணை, அரசு இணையதளமான www.tnhealth.org -யில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
முதல்நாளான ஆகஸ்ட் 24 -ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25 -ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. விடுமுறையிலும் தொடர்ந்து கலந்தாய்வு நடக்கும். அதாவது, விநாயகர் சதுர்த்தி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வில் பங்கேற்க, காசோலை எடுக்க முடியாதவர்களிடம் பணமாக பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு குறித்தத் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்கள்...
அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்களில் காலை 9, 11, பிற்பகல் 2 மணி என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறும்.
இணையதளத்தில் வெளியீடு: மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு அட்டவணை ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு வருவோருக்கு தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org, www.medicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாத மாணவர்கள், தங்களின் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
வரைவோலை: கலந்தாய்வில் பங்கேற்போர் Secretary, Selection Committee, Chennai -10 என்ற பெயரில் ரூ.500க்கான வரைவோலையைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தங்களது அசல் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழைச் சமர்ப்பிக்காதோருக்கு இடங்கள் ஒதுக்கப்படாது.
பொறியியல் போன்ற பிற படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் இருந்து அத்தாட்சி சான்றிதழைப் (Bonafide Certificate) பெற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்றில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்.
முதற்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் பங்கேற்காமல் தவிர்த்த மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment