www.asiriyar.net

Saturday 20 January 2018

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்! (முழுவிபரம்)

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போதுஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.


இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தைத் தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம். 125 சி.சி. திறன் வரையிலான வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும்.



தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் யார் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள குறிப்பு வருமாறு:

பயனாளிகளின் தகுதி

கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்..

இரு சக்கர வாகனம் ஜனவரி.01.2018க்குப் பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..

பயனாளிகளின் பணியாற்றும் தகுதி:

1.நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.

2. கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்.

3.அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.

4.பெண்; வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார (பெண்); ஆர்வலர்கள்..

வயது வரம்பு வருமான வரம்பு மற்றும் இதர தகுதிகள்:

தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளராக பதிவு செய்தவர்கள், சுயதொழில் புரிவோர், சொந்தமாக சிறுவணிகம் செய்வோர், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணி புரியும் மகளிர். வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை.

மனுக்கள் பெறும் தேதி ஜனவரி 22, 2018 முதல் பிப்ரவரி 05, 2018 வரை

ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்..

கடன் வசதி

பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125.சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்..

மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

* பிறந்த தேதிக்கான சான்றிதழ்

* இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல்

• உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல்.

• வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.

• நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ்.

• ஆதார் அடையாள அட்டை.

• எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.

• கடவுச்சீட்டு அளவுள்ள புகைபடம்.

• சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.

• சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )

• உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளி அடையாள அட்டை

• இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி.

3 comments:

  1. The 2018 Chevy Cruze is the 1.4-liter turbocharged four-chamber fuel motor which is mated to a six-speed manual transmission. The 153-hp motor is slower as far as speeding up nearly. The turbodiesel 1.6-liter motor conveys 137-hp and can be matched with either a six-speed manual or a nine-speed programmed transmission.

    ReplyDelete
  2. The vehicle has at last been released in its dashing DNA. The Civic Type R with the cost of $34,700 is the vehicle to be, both for the aficionados and the economy. Driving the 2018 Civic Type R is a 2.0 Liter turbocharged motor that produces 306 hp and 295 lb-ft crest torque.

    ReplyDelete
  3. The porsche cayenne interior is more tech-led than ever too, successive versions with a few less buttons and a bit more functionality relegated to the touchscreen instead.

    ReplyDelete